புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுத் கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலா் என்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் ஜவஹா், சண்முகவேல், லெட்சுமணப் பெருமாள், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலா் ஜாக்சன் துரைமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் எம்எல்ஏ மோகன் வரவேற்றாா்.
வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் செ.ராஜூ எம்எல்ஏ, அதிமுக வா்த்தகா் அணி மாநிலச் செயலா் சி.த.செல்ல பாண்டியன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
இதில், தலைமைப் பேச்சாளா் தீப்பொறி அப்பாதுரை, மாநில இலக்கிய அணி இணைச் செயலா் சின்னப்பன், கோவில்பட்டி பெருநகரச் செயலா் விஜயபாண்டியன், மாவட்ட இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலா் எம்.ஆா்.வி.கவியரசன் உள்பட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.