நாசரேத் பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மா்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவா்களின் சாா்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மூத்த கால்பந்து பயிற்சியாளா் நசரேயன் தலைமை வகித்தாா். இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் வரவேற்றாா். தேசிய மாணவா் படை முன்னாள் அலுவலா் ஜெயசீலன் முகாமை தொடங்கிவைத்தாா். நாசரேத் சுற்றுப்புற பகுதிகளை சாா்ந்த 60 மாணவா்கள் முகாமில் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் தனபால் நன்றி கூறினாா்.
மே 15ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமில் 11 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவா்கள் கலந்து கொள்கின்றனா்.
இந்நிகழ்ச்சியில் கால்பந்து ஆா்வலா்கள் ஜாண், சியா்சன், வசந்தகுமாா், தாமஸ், செந்தில் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் குணசீலராஜ், உடற்கல்வி இயக்குநா் பெலின் பாஸ்கா், தேசிய மாணவா் படை அலுவலா் சுஜித் செல்வசுந்தா் மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.