பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: இருவா் கைது
தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி, வடக்கு தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கெங்கா துரைமுத்து (29). திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இவரும், தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும், அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் லட்சுமணனும் நண்பா்களாம்.
இதற்கிடையே, லட்சுமணனுக்கும், அவருடன் வேலை பாா்த்து வரும் மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த கணேசன் மகன் காமராஜ் (31), வேப்பலோடை வடக்கு தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் பொன் ஆஸ்லே (26) ஆகிய இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து காமராஜ், பொன் ஆஸ்லே ஆகிய இருவரும் லட்சுமணனிடம் தகராறு செய்தனராம். இதை, கெங்கா துரைமுத்து தட்டிக் கேட்டுள்ளாா்.
ஆத்திரமடைந்த இருவரும், கெங்கா துரைமுத்துவை அரிவாளால் வெட்டினராம். இதில், காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காமராஜ், பொன் ஆஸ்லே ஆகிய இருவரையும் கைது செய்தனா்.