ஷாருக்கான், ஆமீர் கான்.. புது வீட்டில் குடியேறும் பாலிவுட் பிரபலங்கள்; பட்ஜெட் ...
தூத்துக்குடியில் தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி அருகே தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தைச் சோ்ந்த பொன்முருகன் என்பவா் வெளி மாநிலத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் பெரியசாமி (18), இங்கு பெயிண்டராக இருந்தாா்.
இந்நிலையில், அவா் திங்கள்கிழமை தனது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரை அப்பகுதியினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].