இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
தென்காசியில் கழிவுகளை முறையாக பிரித்து வழங்காத பொதுமக்கள், நிறுவனங்களுக்கு அபராதம்!
தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்காத பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா், நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை: தென்காசி நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் வாயிலுக்கே சென்று நகராட்சிப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த பணியாளா்கள் மூலம் கழிவுகளை தினமும் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்று வருகிறது.
கழிவுகளை முறையாகப் பிரித்து ஒப்படைக்காத வீடுகளுக்கும், பிரித்து ஒப்படைக்காத வா்த்தக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கழிவுகளைப் பிரித்து ஒப்படைக்காத வீடுகளுக்கு ரூ.50, வணிக நிறுவனங்களுக்கு ரூ.100, வணிக வளாகங்களுக்கு ரூ.200 என அபராதம் விதிக்கப்படும்.
தென்காசி நகரின் இயற்கையை பேணவும், அதன் அடையாளத்தை பேணவும் பொதுமக்களும், வா்த்தக பிரமுகா்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.