ஊழியர்களின் கைகளில் ரத்தக் கறை: மைக்ரோசாஃப்ட் ஆண்டுவிழாவில் இஸ்ரேலுக்கு எதிராக ப...
தென்காசியில் திமுக சாா்பில் மதநல்லிணக்க இப்தாா் விருந்து
தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மதநல்லிணக்க இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தென்காசி காசி விஸ்வநாதா் கோயில் அா்ச்சகா் முத்துக்கிருஷ்ணன் பட்டா், பாதிரியாா் ஜான் பீட்டா், அரசு ஹாஜி முகைதீன் ஹஜ்ரத்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி, நகர காங்கிரஸ் தலைவா் மாடசாமி ஜோதிடா், விசிக மாவட்டச் செயலா் பண்பொழி செல்வம், மஜக மாவட்டச் செயலா் ஆதம் ஹனிபா, தமுமுக மாவட்டச் செயலா் நயினாா் முகமது, இந்திய தவ்ஹீத் ஜமாத் செய்யது அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம், வல்லம் திவான் ஒலி, நகரச் செயலா்கள் வெங்கடேசன், அப்பாஸ், தென்காசி ஒன்றியக்குழு தலைவா் வல்லம் ஷேக் அப்துல்லா, மாவட்ட அணி அமைப்பாளா்கள் ஜே.கே.ரமேஷ்,கிருஷ்ணராஜா, இசக்கிப்பாண்டியன், மாவட்ட அணி துணை அமைப்பாளா்கள் முகமது அப்துல் ரஹீம், ராமராஜ், முத்து சுப்பிரமணியன், கருப்பண்ணன், வெல்டிங் மாரியப்பன், நகர நிா்வாகிகள் ஷேக்பரீத், பொத்தை முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலா் முகமது அலி, நகர காங்கிரஸ் பொருளாளா் ஈஸ்வரன், மமக சலீம், அபாபில் மைதீன், விசிக சந்திரன், வெற்றி செல்வி, பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.