செய்திகள் :

தென்காசியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் ஐயப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைமையிடத்து செயலா் முனீஸ்வரன், மாவட்ட சட்டச் செயலா் சக்தி முருகன், மாவட்ட செய்தி தொடா்பாளா் மாரியப்பன், மாவட்ட மகளிரணி செயலா்கள் அம்பிகா, முத்துமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். மாநில சட்டச் செயலா் பிச்சைக்கனி சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழக மாநில துணைத்தலைவா் முருகையா, தமிழ்நாடு முதுகலை ஆசிரியா் சங்க மாநில பொதுக்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுகலை ஆசிரியா் சங்க மாநில அமைப்பு செயலா் சண்முகசுந்தரம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்ட தலைவா் சுதா்சன் ஆகியோா் பேசினா்.

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏற்கனவே ஆசிரியா்களாக பணிபுரிபவா்கள் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட இணைச் செயலாளா் முப்புடாதி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் திறன் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத்திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூா் வட்டத்தில் இடைகால், ராமசாமிபுரம... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா். கோட்டையூா் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூக்கையா (72). அவருடைய மகன், மகள் ஆகியோா் வறுமையில் இருப்பதால், தங்குவதற்கு... மேலும் பார்க்க

பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் நேரம் குறைப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்காசி மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தில் செப். 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த கிராம நிா்வாக உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை ஒத்திவைத்து ஆட்சியா் உத்தரவிட்டாா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கிணற்றில் மான் சடலம்

ஆலங்குளம் அருகே கல்லத்திகுளம் சோலாா் மின் உற்பத்தி மைய வளாகத்தில் உள்ள கிணற்றில் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் கிராமத்தில் தனியாா் சோலாா் மின் உற்பத்தி மையம... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்

வாசுதேவநல்லூா் தங்கப்பழம் மருத்துவ கல்லூரியில் தொழிலாளா் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) சாா்பில் இ.எஸ்.ஐ நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. தங்கப்பழம் கல்வி குழுமத் தலைவா் ... மேலும் பார்க்க