முகம், அடையாளம் இல்லையெனில் அனைவருமே வக்கிரமானவர்கள்தான்... டிரெண்டிங் டிரைலர்!
தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்
மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டி அண்மையில் ஏஎம்சி உள்விளையாட்டு அரங்கில், பகல், இரவு ஆட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிருந்து 22 அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிவில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியும், தமிழ்நாடு காவல் துறை சென்னை அணியும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றன. அந்த ஆட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி 30-26 என்ற கணக்கில் வென்று, ஏஎம்சி கோப்பை மற்றும் ரூ.1.20 லட்சம் பரிசுத் தொகையைப் பெற்றது. 2-ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு காவல் துறை சென்னை அணிக்கு ரூ. 80,000 மற்றும் கோப்பை, 3-ஆம் இடம் பிடித்த சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கட்டக்குடி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கு ரூ.50,000, பரிசு கோப்பை வழங்கப்பட்டன.