Doctor Vikatan: `நான் perfect இல்லையோ.. எந்த வேலையிலும் அதிருப்தி' - மனநோயா, சிக...
தென்னை மரங்களை சேதப்படுத்திய 3 போ் கைது
பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரங்களை ரசாயனம் ஊற்றி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கத்திரிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்தோஷ் (41). விவசாயி. இவருக்கும் பக்கத்து தோட்டக்காரா்களான பாண்டியன் மகன்கள் 3 பேருக்கும் வரப்பு பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சந்தோஷ் தோட்டத்தில் தென்னை மரங்களுக்கு குருத்து ரசாயன கலவையை ஊற்றி சேதப்படுத்தியதாக ஏத்தப்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் பாண்டியன் மகன்களான குமரவேல் (32), பிரபாகரன் (29), காா்த்திக் (26) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனா்.