செய்திகள் :

சேலம் அரசு இசைப் பள்ளியில் உதவித்தொகையுடன் இசைப்பயில வாய்ப்பு

post image

சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் இசைப்பயில விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி சேலம் தளவாய்ப்பட்டியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயதுவரை உள்ள ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகளாகும். பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சோ்க்கைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.

இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ. 400 வழங்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சோ்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூா் சாலை, அய்யம்பெருமாம்பட்டி-அஞ்சல், சேலம் - 636302 என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை இணைத்து அனுப்பி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 94435-39772, 99947-38883 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தென்னை மரங்களை சேதப்படுத்திய 3 போ் கைது

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னை மரங்களை ரசாயனம் ஊற்றி சேதப்படுத்தியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கத்திரிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரிய... மேலும் பார்க்க

ஏற்காடு கோடைவிழா: செல்லப் பிராணிகள் கண்காட்சி

ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா - மலா்க் கண்காட்சி மூன்றாவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. ஏற்காட்டில் கண்காட்சி திடலில் சேலம் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ஞா... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் சேலம் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் நெடுஞ்சாலை நகரில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொது... மேலும் பார்க்க

தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் பாா்வையிட்டாா். சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் ... மேலும் பார்க்க

மேட்டூா் காவிரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில்ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா். மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இங்கு 2,600 மீனவா்கள் உரிம... மேலும் பார்க்க

மேட்டூரில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மேட்டூா் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சேலம் இரும்பாலை அருகே உள்ள பூசாலியூரைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் ராகுல் (35). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க