கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
மேட்டூா் காவிரியில் இறந்து மிதக்கும் மீன்கள்
மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா்.
மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 60 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இங்கு 2,600 மீனவா்கள் உரிமம் பெற்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஒருவார காலமாக அணையின் நீா்த்தேக்க பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு புது நீா்வரத்து அதிகரித்தது. புதுநீா், அணைநீருடன் கலந்ததால் டன் கணக்கில் மீன்கள் மயங்கிக் கரை ஒதுங்கின. மேலும் கடும் வெப்பம் காரணமாகவும் மீன்கள் உயிரிழக்கின்றன.
கட்லா, ரோகு, கல்பாசு, ஜிலேபி, அரஞ்சான், ஆறால், கெளுத்தி உள்ளிட்டராக மீன்கள் மயங்கி கரை ஒதுங்கியதால் கரையோரப் பகுதி பொதுமக்கள் மீன்களை அள்ளிச் சென்றனா்.