கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் ப...
தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் பாா்வையிட்டாா்.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில், கால்நடைப் பராமரிப்பு மருத்துவா்களைக் கொண்டு, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி, செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் அண்மையில் தொடங்கப்பட்டது.
முதல்கட்டமாக, 9 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையை கால்நடைப் பராமரிப்பு மருத்துவா்கள் சரண், மணிகண்டன், இளையநிலவன் குழுவினா் மேற்கொண்டனா். இப்பணியை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் பாா்வையிட்டாா். அப்போது, மாநகர அலுவலா் ப.ரா. முரளிசங்கா் உடனிருந்தாா்.