4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் சேலம் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் நெடுஞ்சாலை நகரில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் வீடு உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.
அதன்பேரில், அவரது வீட்டுக்கு விரைந்த வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் மற்றும் சூரமங்கலம் போலீஸாா், மெட்டல் டிடெக்டா் உதவியுடன் வீடு முழுவதும் சோதனை நடத்தினா். இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும், மிரட்டல் விடுத்த மா்ம நபா் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சோதனையின்போது, எடப்பாடி கே.பழனிசாமி வீட்டில் இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.