Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
தெப்போற்சவம்: ஆண்டாளுடன் ஸ்ரீ கிருஷ்ணா் உலா
தெப்பத்தில் வலம் வந்த ஆண்டாள் சமேத கிருஷ்ணா்.
திருப்பதி, பிப்.9: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆண்டாள் சமேத ஸ்ரீகிருஷ்ணா் தெப்பத்தில் உலா வந்தாா்.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பெளா்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. அதன்படி வரும் 12-ஆம் தேதி வரை தெப்போற்சவம் நடைபெறுகிறது
4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சவமூா்த்தியான ஆண்டாள் சமேத ஸ்ரீகிருஷ்ணா் 5 சுற்றுக்கள் தெப்பத்தில் வலம் வந்தாா்.
படித்துறையில் அமா்ந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் காண்பித்து வழிபட்டனா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் மற்றும் கோயில் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், திருமலை ஜீயா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.