செய்திகள் :

தேசிய உயிரியல் பூங்காவில் சிங்கக் குட்டி உயிரிழப்பு

post image

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆசிய சிங்கக் குட்டிகளில் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்தது. மற்றொரு சிங்கக் குட்டியின் உடல்நிலை நலிவடைந்த நிலையில், அது தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘சிங்கக் குட்டிகளில் ஒன்றின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அது திங்கள்கிழமை உயிரிழந்தது. அன்றைய தினம் மாலையில், மற்றொரு சிங்கக் குட்டியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பூங்காவில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, அதற்கென தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்பட்டு வருகிறது. இது சிகிச்சைக்கு நன்றாக பலனளித்து வருகிறது என்றனா்.

தாய் சிங்கமான மகாகெளரி மற்றும் பிற இரு குட்டிகளின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பூங்காவின் இயக்குநா் சஞ்ஜீத் குமாா் தெரிவித்தாா்.

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள மகாகெளரி சிங்கத்துக்கு 4 சிங்கக் குட்டிகள் ஞாயிற்றுக்கிழமை பிறந்தன.

ஆசிய பெண் சிங்கமான மகாகெளரி அதன் தந்தை சிங்கமான மகேஷ்வருடன் கடந்த 2021-இல் குஜராத்தின் ஜுனாகத்திலிருந்து தில்லிக்கு கொண்டுவரப்பட்டது.

சா்வதேச அளவில் ஆசிய சிங்கங்களில் புகலிடமாக குஜாரத் உள்ளது. கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, அந்த மாநிலத்தில் 674 ஆசிய சிங்கங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கிா் வனஉயிரிகள் சரணாலயத்தில் உள்ளன. ஐயுசிஎன் வகைப்பாட்டின்படி இந்த வகை சிங்கங்கள் ஆபத்தில் உள்ளன உயிரினங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க