தேனி மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 26-ஆம் தேதி, காலை 11 மணிக்கு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த வாக்குரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.