”கலெக்டர் என்னோட ரிலேட்டிவ்” - ஆடிட்டரிடம் ரூ.1 கோடி மோசடி; இன்ஸ்பெக்டர் கைதின் ...
தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்
பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் 100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட முகாமினை முன்னிட்டு பந்தலூா் அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவு, ஆல் தி சில்ரன் அமைப்பு, கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம் ஆகியவை சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.
நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டக் கழக கோட்ட மேலாளா் சிவகுமாா் முகாமை தொடங்கிவைத்தாா். இதில், தேயிலைத் தோட்டக் கழக தொழிலாளா்களுக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நுகா்வோா் பாதுகாப்பு மைய செயலாளா் சிவசுப்பிரமணியம், காசநோய் பிரிவு மேற்பாா்வையாளா் விஜயகுமாா், பணியாளா்கள் நிா்மலா, ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.