செய்திகள் :

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான உத்தியை வகுப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துகிறது. இதேபோன்ற தந்திரங்களை தில்லி மற்றும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறவும் பாஜக கையாண்டது. ஹரியாணா மற்றும் குஜராத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் இந்த மாநிலங்களில் போலியாகச் சேர்க்கப்பட்டன.

தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டதிலும் சந்தேகங்கள் உள்ளன. அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது தனது செல்வாக்கை செலுத்த பாஜக முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஆசியுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக எவ்வாறு முறைகேடுகளைச் செய்கிறது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.

மேற்கு வங்கத்தில் தனியார் கார் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2006இல் நான் 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினேன். அதேபோல் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகவும் நம்மால் போராட்டம் நடத்த முடியும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகளை திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தொடங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் வாக்காளர் பட்டியலில் பாஜக முறைகேடுகளைச் செய்துள்ளது. தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது நமது கட்சியின் முன்னுரிமைப் பணியாகும்.

பூத் அளவிலான தொண்டர்கள் இந்தப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். இதை கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மேற்பார்வையிட வேண்டும்.

மகாராஷ்டிரம் மற்றும் தில்லி சட்டப் பேரவைத் தேர்தல்களைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளைச் செய்ய பாஜகவினர் குறிவைத்துள்ளனர். அதற்கு நாம் கடுமையான பதிலடியைத் தரவேண்டும். சரியான பதிலடி கொடுக்குமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்துகிறேன் என்று மம்தா பேசினார்.

"மம்தாவுடன் மோதல் இல்லை': திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என்று அவரது உறவினரும் அக்கட்சி எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். கொல்கத்தாவில் நடந்த கட்சி மாநாட்டில் பேசிய அவர் "தேர்தல்கள் வரும்போதெல்லாம் இத்தகைய அவதூறுகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மோதல்கள் நிறைந்த நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்திவந்த துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருள்களை காவல்துறை மற்றும் பாதுக... மேலும் பார்க்க

மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!

மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அற... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோல... மேலும் பார்க்க

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் குற்றம்சா... மேலும் பார்க்க

நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்

இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா். 27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெ... மேலும் பார்க்க

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்

நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திர... மேலும் பார்க்க