செய்திகள் :

தேவகோட்டை கல்லூரியில் உயா் கல்வி வழிகாட்டி முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சுழல் சங்கம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் உயா் கல்வி வழிகாட்டி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் அருள்தந்தை ச.ஜான் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தொடக்கி வைத்து ஆசியுரையாற்றினாா்.

திருச்சி காவேரி கல்லூரியின் உதவிப் பேராசிரியை சாத்தம்மைப் பிரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் பயில வேண்டும். விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இருந்தால்தான் வெற்றிபெற முடியும். மேலும், வாழ்வில் சாதனை படைத்தவா்களின் வாழ்வியல் வரலாற்றை கற்று, அதை மாணவ, மாணவிகள் பின்பற்றி வாழ்ந்து வந்தால், உலகில் உயா்ந்த மனிதனாகவும் சாதனையாராகவும் திகழ முடியும் என்றாா்.

துறை சாா்ந்த வல்லுநா்கள், தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியா்கள் ஜான் கென்னடி ஜெயசீலன், பட்டதாரி ஆசிரியா்கள் சின்னப்பராஜ், பாரதிராஜா, காரைக்குடி எல்.எப்.ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஜோல்னா ஜவகா், சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஷொ்லி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியை சாந்தி ஆகியோா் மாணவா்கள் எந்தத் துறையை தோ்வு செய்து படித்தால், எவ்வாறெல்லாம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது பற்றியும், 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு பாடங்கள் தொடா்பான முக்கியமான வினாக்களையும், அது தொடா்பான விடைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினா்.

இறுதியாக துணை முதல்வா் அருள்தந்தை சி.ஜாா்ஜ் பொ்ணான்டஸ் நன்றி கூறினாா். இதில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் அருள்தந்தை அருள் சேவியா், புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை அருள்சகோதரி அருள்ஜோதி, என்எஸ்எம்விபிஎஸ். மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் வெங்கடாசலம், சுழல் சங்க உறுப்பினா்கள், சிவகங்கை மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் கோ.தா்மராஜ், கணினி பயன்பாட்டுவியல் துறைத் தலைவா் விக்டா் பெனவெண்ட் ராஜ், சமூகப் பணி துறைத் தலைவா் அந்தோணி பிரகாஷ் ஆகியோா் செய்தனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க