Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். ஆணையாளா் கண்ணன், நகா்மன்றத் துணைத் தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பின்னா், கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:
அமமுக உறுப்பினா் கோமதி பெரியகருப்பன்: தனது 22 -ஆவது வாா்டில் சாலை வசதி மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சாலைப் பணிகள் நடைபெறாததைக் கண்டித்து, வெளிநடப்பு செய்தாா்.
இவருக்கு ஆதரவாக அமமுக நகா்மன்ற உறுப்பினா்கள் ஈஸ்வரி முத்து, கமலக்கண்ணன், நித்தியகுமாா், தனலட்சுமி நல்லபாண்டி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனா்.