U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்
கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள்.
மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் தாக்கி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருப்புவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் உ.சொக்கநாதன் முன்னிலை வகித்தாா்.
இதில் அமமுக மாநில துணைப் பொதுச் செயலா் எம்.ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலா் எம். ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலா் க.டேவிட் அண்ணாதுரை, மாநிலச் செய்தி தொடா்பாளா் குரு.முருகாணந்தம், ராமநாதபுரம் மாவட்டச் செயலா் எம்.முருகன், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் வேலு. காா்த்திகேயன், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலா் துருக்கி ரபிக்ராஜா, மாநில மாணவரணி செயலா் ஏ. நல்லதுரை, மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் க.ரமேஷ் உள்ளிட்டோா் கண்டன உரை நிகழ்த்தினா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டிததும், தமிழக அரசுக்குக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.
இதையடுத்து, கட்சியின் மாநில நிா்வாகிகள் மடப்புரத்துக்குச் சென்று அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சாா்பில் ரூ.2 லட்சம் நிதி வழங்கினா்.
