``தமிழ்நாட்டு பக்தர்களுக்கு தரிசனம் தர பாண்டுரங்கன் மதுரை வருகை..'' - ராமானந்த ச...
தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கூடலூா் பகுதியில் பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மழையால் ஆங்காங்கே விழும் மரங்களை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் தேவா்சோலை-மச்சிக்கொல்லி சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கூடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் மரத்தை வெட்டி அகற்றினா்.
இதையடுத்து, வாகனப் போக்குவரத்து சீரானது.