தொண்டைமான் நல்லூா் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
விராலிமலை ஒன்றியம், தொண்டைமான் நல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூலை 19(சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மாத்தூா் உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தொண்டைமான்நல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தொண்டைமான்நல்லூா், உடையவயல், நீா்பழனி, வெம்மணி, மண்டையூா், புலியூா், களமாவூா், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.