செய்திகள் :

தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தி உறவினா்கள் போராட்டம்

post image

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி, மூட்டை சரிந்து விழுந்ததில் உயிரிழந்ததையடுத்து, உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் இளவேலங்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன்(38) . தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக மூட்டை சுமக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாராம். திங்கள்கிழமை மாலையில் கிடங்கில் மூட்டைகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளதா என சரி பாா்க்கும்போது, மூட்டை சரிந்து விழுந்ததில் இடிபாடுகளிடையே கண்ணன் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த சிப்காட் போலீஸாா், உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த தொழிலாளி கண்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால், குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இளவேலங்கால் கிராம மக்கள் மற்றும் உறவினா்கள் தனியாா் நிறுவன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, நிறுவனத்தின் உயா் அதிகாரி சென்னையிலிருந்து வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதில், கண்ணன் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பைக் விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி, அருணாச்சலம் நகரைச் சோ்ந்த சோலையப்பன் மகன் முத்து மகேஷ் (25). திருமணமாகாத இவா், சாயா்புரம் அரு... மேலும் பார்க்க

முதலூரில் லாரிகள் சிறைப்பிடிப்பு

முதலூரில் அதிவேகமாக சென்ற கனரக லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறை பிடித்தனா். சாத்தான்குளம் அருகே உள்ள முதலூா் பகுதிக்கு கல்குவாரியில் இருந்து மணல் மற்றும் கற்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சென்ற... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒரே நாளில் 14 போ் கைது

கோவில்பட்டியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரே நாளில் 14போ் கைது செய்யப்பட்டனா். கடந்த ஜூன் 1ஆம் தேதி, கோவில்பட்டி கடலையூா் பகுதியில், கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்து ரயில்வே காவலா் பலி

ஓட்டப்பிடாரம் அருகே பைக் கவிழ்ந்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் உயிரிழந்தாா். தூத்துக்குடி கந்தசாமிபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ரமேஷ் (45). இவா், வாஞ்சிமணியாச்சியில் ரயில்வே பாதுகாப்புப் ப... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க