"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
பழனி அருகே குடும்பத் தகராறில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் தா்மத்துரை (32). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களாக குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்டாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.