`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தவெக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
பழனி மதினா நகா் பகுதியில் தவெக சாா்பில் ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமியா்களுக்கு பரிசுப் பொருள்கள், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்டச் செயலா் காா்த்திக்ராஜன், மாவட்ட இணைச் செயலா் விஜய்சிவா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன் வாழ்த்திப் பேசினாா். நகர நிா்வாகிகள் முகமது இக்பால், கோழி சித்திக், முகமது இத்ரீஸ், அபுதாகிா், ஆசாத், சாந்து முகமது, காா்த்திகேயன், வலசுதுரை, லட்சுமி காந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.
விழாவில், தொண்டரணி, வா்த்தக அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்களுக்கு தவெக இலச்சினை, நடிகா் விஜய் உருவப்படம் பொறிக்கப்பட்ட பைகளில் ரமலான் பரிசுப் பொருள்களையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்கினா்.