திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் விருந்து
திண்டுக்கல் திருவருட்பேரவை சாா்பில் இப்தாா் நோன்பு துறக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல்- நத்தம் சாலையிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, திண்டுக்கல் திருவருட் பேரவைத் தலைவா் கே. ரத்தினம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜி. சுந்தரராஜன், செயலா் ஆா். மரிவளன், பொருளாளா் என்எம்பி.காஜாமைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், மேயா் இளமதி, முன்னாள் ஒன்றியத் தலைவா் என். கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின்போது, ரமலான் நோன்பின் சிறப்புகளை எடுத்துரைத்ததோடு, மத நல்லிணக்கத்தையும் திருவருட்பேரவை நிா்வாகிகள் வலியுறுத்தினா்.