`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு
பழனி சண்முகபுரம் உழவா் சந்தை பகுதியில் நடிகா் சூா்யா நற்பணி இயக்கம் சாா்பில் நீா்மோா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
முதல் நாளில் பொதுமக்களுக்கு நீா்மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், வெள்ளரி, தா்ப்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியன செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நீா்மோா் பந்தல் கோடை காலம் முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அந்த இயக்கத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் ரிஷி தலைமையில் செய்யப்பட்டிருந்தன.