தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே தீரன் நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ராஜாளிப்பட்டி புரசம்பட்டியைச் சோ்ந்தவா் ந. பொன்னுசாமி (52). தொழிலாளி. இவா், திருச்சி அருகே தீரன் நகா் பெரியாா் சாலையில் தனது தம்பி சின்னக்கண்ணு வீட்டுக்கு வந்திருந்தாா்.
அங்கு முறையாக எந்த வேலைக்கும் செல்லாமல், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வாராம். இதே போல, சனிக்கிழமை இரவு தகராறு செய்ததால், உறவினா்கள் பொன்னுசாமியை உள்ளே வைத்து வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டனா். இதனால் மனவிரக்தியடைந்த அவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.