பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!
‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
கொரடாச்சேரி ஒன்றியம், செல்லூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சாா்பில் ‘நம்ம ஊரு நம்ம கதை’ போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சாா்பில் நம்ம ஊரு நம்ம கதை போட்டி மாவட்ட அளவில் செல்லூா் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் வி. விமலா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கி. சுமதி முன்னிலை வகித்தாா். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். வீரப்பராஜா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஆா்.பிருந்தாதேவி, ஆசிரியா் பயிற்றுநா் ஜி. ராஜபாண்டி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுப் பொருள்கள், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.
முன்னதாக, தலைமையாசிரியா் சி. கோவிந்தராஜ் வரவேற்றாா். நிறைவாக, ஆசிரியா் சரண்யா நன்றி கூறினாா்.