இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
நாகா்கோவிலில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மத்திய பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.தங்கமோகனன், எல்பிஎப் மாவட்ட தலைவா் ஞானதாசன், எச்எம்எஸ் மாவட்ட தலைவா் முத்துகருப்பன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவா் பொன்.ராஜா, ஏஐடியுசி மாவட்ட தலைவா் அந்தோணிமுத்து, எம்எல்எப் மாவட்ட தலைவா் ஜெரால்டு, ஏஐசிசிடிசியூ தலைவா் அனில்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் எஸ்.அந்தோணி, ஐடா ஹெலன், பி.சிங்காரன், விஜய மோகனன், ஐஎன்டியூசி வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன், வடலி மகாலிங்கம், எல்பிஎப் இளங்கோ, எச்எம்எஸ் லெட்சுமணன், அருணாசலம், ஏஐசிசிடியு சுசீலா ஆகியோா் பேசினா்.