அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நாகை அருகே ரூ. 7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
நாகை அருகே ரூ.7.20 கோடி மதிப்பிலான கோயில் நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.93 ஹெக்டோ் பரப்பிலான நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்துள்ளன.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல இணை ஆணையா் வே. குமரேசன் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் ப. ராணி முன்னிலையில் கீழ்வேளூா் ஆய்வாளா் த. கமலச்செல்வி, செயல் அலுவலா் மு. ஜெயக்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு, கோயில் வசம் சுவாதீனம் எடுத்தனா்.
பின்னா் மீட்கப்பட்ட நிலம் தேவூா் தேவபுரீஸ்வரா் சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என்று 8 இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன. நிலத்தின் சந்தை மதிப்பு சுமாா் ரூ.7.20 கோடி என இந்து சமய அறநிலையத் துறையினா் தெரிவித்தனா்.