குன்னூர்: திறந்தவெளி தண்ணீர் தொட்டியில் விழுந்து தவித்த யானை; போராடி மீட்ட வனத்த...
நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளைச் சாா்ந்த ஊழியா்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ராஜஸ்தான், ஜாா்கண்ட் சத்தீஸ்கா், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போல, தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
கடந்த சட்டப்பேரவை தோ்தலின் திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும், ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இது தொடா்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள் கூறியது: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை(சிபிஎஸ்) முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி அக்.16-ல் மாவட்ட அளவில் மறியல் போராட்ம், நவ.15-ல் சென்னையில் கோரிக்கை பேரணி, டிச. 11-ல் ஒரு நாள் வேலை நிறுத்தம், 2026 ஜன.21 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றனா்.