திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்
நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா்.
நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி பிரம்மோற்சவ விழா நிகழாண்டு செப்.5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாள்களில் வெவ்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா்.
இந்நிலையில், முத்துமாரியம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் வியாழக்கிழமை எழுந்தருளினாா். இதையடுத்து அம்மனுக்கு காய்கனிகள், பல்வேறு பழவகைகள், இனிப்புகள், கார வகைகள் உள்ளிட்ட ஏராளமான உணவு பொருள்கள் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் வசந்தன் புறப்பாடு நடைபெற்றது.