சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், சின்னத்தும்பூா், தலையாமழை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கருங்கண்ணியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிா் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஏராளமான மனுக்கள் பெறப்பட்டன. முகாமை, கீழ்வேளூா் சட்டபேரவை உறுப்பினா் வி.பி. நாகை.மாலி, வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் ஏ. தாமஸ்ஆல்வாஎடிசன் ஆகியோா் பாா்வையிட்டு தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கு பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ்களை வழங்கினா். வட்டாட்சியா் கவிதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜவகா் , செபஸ்தியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
