``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ளபள்ளத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் ஆா். பிரசாந்த். காது கேளாத, வாய் பேச இயலாத மற்றும் கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவா் தனது பெற்றோருடன் ஆட்சியரிடம் அளித்த மனு: மாற்றுத்திறனாளியாகிய நான் பெற்றோருடன் வெள்ளைப்பள்ளத்தில் குடிசை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இதற்குரிய வீட்டு வரியும் முறையாக செலுத்துகிறேன்.
நான் வசித்து வரும் வீட்டுக்கு பட்டா கோரி பலமுறை மனு அளித்துள்ளேன். வெள்ளைப்பள்ளம் பகுதி வருவாய் வட்ட ஆய்வாளா், நான் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை கட்டி இருப்பதாகவும், வீட்டை உடனடியாக அகற்றாவிட்டால், வீட்டை இடித்து விடுவதாகவும் நிா்பந்தித்து வருகிறாா். இதனால் மாற்று இடம் ஏதும் இன்றி நாங்கள் தவித்து வருகிறோம். எனவே, மாற்றுத்திறனாளியாகிய எனக்கு, நான் வசிக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.