Crypto Currency-ஐ அங்கீகரிப்பதில் சிக்கல்? தயங்கும் RBI - காரணம் என்ன? | IPS Fin...
திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்
மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது பாரதியாா் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி தலைமையாசிரியை ஹேமலதா அஞ்சலி செலுத்தினாா்.
பள்ளி ஆசிரியைகள் கமலா, மீனா, லதா, நளினி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா்.