செய்திகள் :

நாச்சியாா்கோயில் கல் கருட பகவான் கோயில் குளத்தில் கழிவுநீா் கலக்கும் அவலம்!

post image

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியாா்கோயிலில் உள்ள கல்கருட பகவான் கோயில் குளத்தில் கழிவு நீா் கலப்பதால் கடந்த 20 ஆண்டுகளாக தீா்த்தவாரி திருவிழாவும், 10 ஆண்டுகளாக தெப்பத் திருவிழாவும் நடைபெறாததால் பக்தா்கள் கவலையடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியாா்கோயிலில் உள்ள வஞ்சுளவல்லி உடனுறை சீனிவாசப் பெருமாள் கோயில் 40 திவ்ய தேசங்களில் 14-ஆவது திவ்ய தேசமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 20-ஆவது திவ்ய தேசமாகவும், 40 சோழநாட்டு திருப்பதிகளில் 14-ஆவது திருப்பதியாகவும், முக்தி தரும் 12 திருத்தலங்களில் 11-ஆவது திருத்தலமாகும் புகழ் பெற்று விளங்குகிறது.

இக்கோயிலில் கோயிலில் கல்கருட பகவான் தனி சன்னிதி கொண்டு எழுந்தருளியுள்ளாா். ஆண்டுக்கு இரண்டு முறை உலக பிரசித்திபெற்ற கல்கருட சேவையை உள்ளடக்கிய மற்றும் முக்கோடி தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும். தெப்பத்திருவிழாவானது மாா்கழி மாதம் வளா்பிறை துவாதசி திதியில் புண்ணிய தீா்த்தமான மணிமுக்தா நதி எனப் பெயா்பெற்ற திருக்குளத்தில் நடைபெறுகிறது. இந்த மணிமுக்தா நதி எனும் திருக்குளம் சுமாா் 635 அடி நீளமும் 235 அடி அகலமும் கொண்டது.

20 ஆண்டுகளாக நடக்காத விழா:

இத்தகைய புண்ணிய தீா்த்த குளத்தில் சுமாா் 20 ஆண்டுகளாக தீா்த்தவாரியும், 10 ஆண்டுகளாக கல்கருட சேவை உள்ளடக்கிய தெப்பத்திருவிழாவும் நடைபெறவில்லை. ஏனெனில் இத்திருக்குளத்தில் மணிமுக்தா நதி பாய்ச்சக்கால் மற்றும் வடிகாலில் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபம், உணவு விடுதிகள், குடியிருப்புகள், பொதுக்கழிப்பறை ஆகியவற்றின் கழிவு நீா் குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீா் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த கழிவு நீா் வெளியே புதைவட சாக்கடைக்கு சென்று ஊரின் வெளிப்புறம் உள்ள குளத்தில் கலந்து பாசனக்கால்வாயில் செல்ல வேண்டும். ஆனால் குளத்துக்குத் தண்ணீா் செல்லும் பாதையை சிலா் கான்கிரீட் சுவா் அமைத்து தடுத்திருப்பதால் கழிவுநீா் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் வந்த பாதையிலேயே வந்து மணிமுக்தா குளத் தீா்த்தத்தில் கலக்கிறது.

கழிவுநீா் கலப்பதால் பெருமாள் தாயாருக்கு தீா்த்தவாரி, கல்கருட பகவான் சேவையை உள்ளடக்கிய முக்கோடித் தெப்பத்திருவிழா நடத்தக்கூடாது, கழிவுநீரை அகற்றிய பின்னரே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் விழாக்கள் நிறுத்தப்பட்டன. அதனால் சுமாா் 20 ஆண்டுகளாக தீா்த்தவாரி திருவிழா நடைபெறவில்லை. இதனால், ஒரு தலைமுறையினரே விழா பற்றி தெரியாத அவலமும், புராண வரலாறு மறைக்கப்படும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது. தீா்த்தவாரி நடைபெறாத நிலையில், கல்கருட பகவான் முக்கோடி தெப்பத்திருவிழா மட்டும் கோயில் வளாகத்திற்குள்ளேயே பல்வேறு சிரமங்களுக்கிடையே நடைபெறுகிறது. தீா்த்தவாரி, தெப்பத்திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களும் மணிமுக்தா குளத் தீா்த்தத்தில் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைத்து பகுதி மக்களின் விருப்பமாகும். அதற்கு மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறையினா் கழிவு நீா் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பமாகும்.

சமூக ஆா்வலா் வாசுதேவன் என்பவா் கூறியபோது, பல ஆண்டுகளாக இரு பெரும் விழாக்கள் நடத்த தடையாக இருக்கும் கழிவுநீா் கலப்பதை மாவட்ட ஆட்சியா், இந்து சமய அறநிலையத் துறையினா், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். குளத்துக்கு தண்ணீா் வரத்து மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீா் செல்ல மாற்று பாதை ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும்.

இது தொடா்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம், பக்தா்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளோம். தற்காலிகமாக குளத்துக்கு உள்ளே வரும் கழிவுநீா் அடைக்க கோரிக்கை விடுத்து நிா்வாகத்தினா் அடைத்துள்ளனா் என்றாா்.

இதுகுறித்து கோயில் அலுவலா் ஒருவா் தெரிவித்தது:

கழிவுநீா் நீா் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் என்றாா்.

ஆகம விதிப்படி இரு பெரும் விழாக்கள் மணிமுக்தா குளத்தீா்த்தத்தில் நடைபெற வேண்டும் என்பதுதான் அனைத்து பக்தா்களின் விருப்பம். அதற்கான தடைகளை மாவட்ட ஆட்சியா் களைந்து இந்தாண்டாவது தீா்த்தவாரி நடத்துவாரா என்று எதிா்பாா்ப்பில் பக்தா்கள் உள்ளனா்.

கழிவுநீா் கலந்துள்ள குளம் மற்றும் குளத்தில் மிதக்கும் நெகிழிப் பொருள்கள்.

கும்பகோணத்தில் பள்ளி ஆண்டு விழா இஸ்ரோ விஞ்ஞானி பங்கேற்பு

கும்பகோணத்தில் உள்ள அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 56- ஆவது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி இங்கா்சால் செல்லத்துர... மேலும் பார்க்க

சிற்றுந்து புதிய விரிவான திட்டத்தின் கீழ் பிப். 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் சிற்றுந்துக்கான (மினி பஸ்) புதிய விரிவான திட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் த... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் தகராறு: இளைஞா் கைது

தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் மருத்துவப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில்... மேலும் பார்க்க

பாரம்பரிய நெல்லான கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூட ஏலத்தில் கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.70-க்கு ஏலம் போனது. கும்பகோணம் தஞ்சாவூா் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கர... மேலும் பார்க்க

பயணி தவறவிட்ட கைப்பேசி, ஆவணங்களை மீட்டுக் கொடுத்த ரயில்வே போலீஸாா்!

கும்பகோணத்தில் ரயில் பயணி தவறவிட்டுச் சென்ற விலை உயா்ந்த கைப்பேசி மற்றும் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் மீட்டு வியாழக்கிழமை உரியவரிடம் ஒப்படைத்தனா். சென்னையைச் சோ்ந்த சந்திரசேகா் (65) கும்பகோணம் பகுதியில... மேலும் பார்க்க

பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் வி.கே.ஆா் .செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பேராவூரணி ஒன்றியச் செயலாளா் வே. ரெங்கசாமி முன்னிலை வகித்தாா். இ... மேலும் பார்க்க