செய்திகள் :

நாடக நடிகரை தாக்கிய இளைஞா் கைது

post image

வந்தவாசி அருகே நாடக நடிகரை தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்(47). இவா் நாடகக் குழு வைத்து நடத்தி வருகிறாா். இவரிடம் மருதாடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்பவா் நடிப்பதற்காக ரூ.30 ஆயிரம் முன்பணமாக பெற்றாராம். இதன் பின்னா் மணிகண்டன் நடிப்பதற்கு வராமல் வேறு வேலை செய்து வருகிறாராம். மேலும் முன்பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிருஷ்ணன் தனது நாடகக் குழுவினருடன் வேனில் மருதாடு புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது வேனை வழிமறித்த மணிகண்டன், வேனிலிருந்த கிருஷ்ணனை தாக்கினாராம். மேலும், ஜாதி பெயரைக் கூறி அவதூறாக பேசினாராம்.

இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் மணிகண்டனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க