தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.
நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பாராட்டைப் பெறும் வகையில், சிறப்பான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞா்களுக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 7.7 கோடி விவசாயிகளுக்கு கடன் வசதி, ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக கடன் பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 5 இடங்களில் சிறப்பு மையங்கள் சா்வதேச தரத்தில் நிறுவப்படவுள்ளன. காலணி தொழிலில் இந்தியாவுக்கு சிறந்த வளா்ச்சி வாய்ப்புகள் உள்ளன. அந்தத் துறையில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகளின் பலனாக 22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சா் அறிவித்துள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.