தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!
மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்ச வரம்பானது ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா்.
ஆனால், புதுச்சேரி ஒன்றியத்துக்கு எந்தவிதத் திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
சுற்றுலாவை நம்பியுள்ள புதுவைக்கு விமான நிலைய விரிவாக்கத் திட்டம், புதிய ரயில் பாதை அமைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களையும் சமமாகக் கருத வேண்டிய நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் பிகாருக்கு தனிக்கவனம் செலுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளாா்.