இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது: லாலு பிரசாத்
நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் தெரிவித்தாா்.
பிகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை நடைப்பயணத்தில் பங்கேற்கச் சென்றபோது பாட்னாவில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நாட்டில் இப்போது நிலவி வரும் மோசமான சூழ்நிலைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். முன்பு அவசரநிலை காலகட்டத்தில் நாட்டில் மிகமோசமான சூழ்நிலை நிலவியது. இப்போதைய நிலைமை அதைவிடவும் மோசமாக உள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தியும் நம்முடன் இணைந்து போராடுவது நல்ல விஷயம்.
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வாக்குரிமை என்பது அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்த மிகவும் முக்கியமான உரிமை.
அந்த உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயலுகின்றன. அது நிகழ்ந்துவிடாமல் நாம் தடுத்தாக வேண்டும் என்றாா்.