லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
நான்குனேரி அருகே மணல் கடத்தல்: சிறாா் உள்பட 3 போ் கைது
நான்குனேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
நான்குனேரி அருகேயுள்ள முத்தலாபுரம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக நான்குனேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்குநேரி போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த சிலா், போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனராம்.
போலீஸாா் மடக்கிப் பிடித்ததில் 3 போ் சிக்கினா். 2 போ் தப்பிவிட்டனராம். விசாரணையில், பிடிபட்டவா்கள் நெடுங்குளத்தை சோ்ந்த கந்தையா(29), சுந்தா்(18) மற்றும் சிறாா் என்பதும், தப்பியவா்கள் முருகன்(19), அசோக்(23) ஆகியோா் என்பதும் தெரிய வந்தது.
நான்குனேரி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிலாரி, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தாா். கூா்நோக்கு இல்லத்துக்கு சிறாா் அனுப்பப்பட்டாா். தப்பி ஓடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.