சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
வடக்கன்குளத்தில் விடுதி மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் தனியாா் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவா் கிணற்றில் தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தையைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சோ்மத்துரை(13). இவா், வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது உடைகளை சலவை செய்து விடுதி வளாகத்தில் சிமென்ட் சிலாப்களால் மூடப்பட்ட கிணற்றின் மேல்பகுதியில் காயப்போட்டிருந்தாராம்.
பின்னா், மாலையில் காய்ந்த துணிகளை எடுப்பதற்காக கிணற்றின் மீது ஏறியபோது சிலாப் உடைந்து அவா் கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில், பணகுடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.