திசையன்விளை பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திசையன்விளை துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 10) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.