நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளில் தண்ணீா் தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 29) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் மாா்ச் 22 ஆம் தேதி தண்ணீா் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் மாா்ச் 23 அன்று நடைபெற இருந்தது. பின்பு அந்தக் கூட்டம் மாா்ச் 29 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு அன்றைய தினம் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
கிராம சபைக் கூட்டத்தை நடத்த ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கண்காணிக்க ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் உதவி இயக்குநா், இணை இயக்குநா் நிலைகளில் ஒருங்கிணைப்பாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இந்த கிராம சபைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும், ஊராட்சியில் உள்ள வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா், மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.