மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி
அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், இந்தியன் நேவி, மலேசியா, மத்திய நேரடி வரிகள் வாரிய அணி ஆகியவை முதல்முறையாக இணைகின்றன.
‘ஏ’ பிரிவில் இந்தியன் ரயில்வே, இந்தியன் ஆா்மி, என்சிஓஇ போபால், ஹாக்கி மகாராஷ்டிரா, ஹாக்கி தமிழ்நாடு, ‘பி’ பிரிவில் இந்தியன் ஆயில், மலேசியா ஜூனியா், இந்தியன் நேவி, ஹாக்கி கா்நாடகம், சிபிடிடி அணிகள் இடம் பெறுகின்றன.
லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெறவுள்ள இப்போட்டியின் அனைத்து ஆட்டங்களும் மின்னொளியில் விளையாடப்படவுள்ளன. இரு பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இறுதி ஆட்டம் வரும் 20-இல் நடைபெறும்.
கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 7 லட்சம், ரன்னா் அப் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் அணிகளுக்கும் தலா ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஃபாா்வா்ட் வீரா், சிறந்த மிட்ஃபீல்டா், சிறந்த கோல்கீப்பா், இறுதி ஆட்டத்தில் மேன் ஆப் தி மேட்ச் வெல்வோருக்கு டிஐ சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.10,000 மதிப்புள்ள உயா் ரக மிதிவண்டியும் பரிசாக வழங்கவுள்ளது.
எம்சிசி கௌரவச் செயலா் நிரஞ்சன் முதலியாா், தலைவா் விவேக் குமாா் ரெட்டி, எம்சிசி ஒருங்கிணைப்புச் செயலா் ராஜீவ் ரெட்டி, டிஐ செயல் தலைவா் அருண் முருகப்பன், ஒலிம்பியன்கள் பாஸ்கரன், முகமது ரியாஸ் பங்கேற்றனா்.