செய்திகள் :

நிதிசாரா துறை சீா்திருத்தங்களுக்கான உயா்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்! - நிதிச் செயலா்

post image

‘நிதிசாரா துறைகளில் ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயா்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும்’ என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலா் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில், நிதிசாரா துறையில் விதிமுறைகள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் அனுமதி உள்ளிட்ட ஒழுங்காற்று நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக உயா்நிலைக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தாா்.

இந்தக் குழு ஓராண்டுக்குள் பரிந்துரைகளை வழங்கும். நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிா்வாகத்தை வலுப்படுத்துவதும், நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பது இக்குழுவின் நோக்கமாகும். இந்த முன்னெடுப்பில் இணைய மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நிதிச் செயலா் அஜய் சேத் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பல கட்டமைப்புச் சீா்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம், அந்த சீா்திருத்தங்களை தொழில்நுட்ப வளா்ச்சியுடன் இணைப்பது, அவற்றின் பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதிகளை நீக்குவது அல்லது காலச்சூழலுக்கேற்ப அவற்றின் பொருத்தத்தைப் பராமரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களுக்கு உகந்த, நவீன மற்றும் நெகிழ்வான ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியமுள்ளது. எனவே, நிதிசாரா துறைகளில் ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயா்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே போட்டித்தன்மை வாய்ந்த கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்கவும், எந்த மாநிலம் முதலீட்டாளா்களுக்கு ஏற்றது என்பதை மதிப்பிடவும், ‘மாநிலங்களுக்கான முதலீட்டு குறியீடு’ தொடங்கப்படும்.

இது மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். மேலும், முதலீட்டை ஈா்க்கும் வகையில் சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த அவா்களை ஊக்குவிக்கும். அனைவரும், அனைத்து மக்களும், அனைத்து பிராந்தியங்களும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே ‘வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை நோக்கிய நமது பயணம் சாத்தியமாகும் என்றாா்.

நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்!

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நாளை(ஏப். 2) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவ... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,... மேலும் பார்க்க

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க