நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி தொடக்கம்
காரைக்கால்: நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டப கட்டுமானப் தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டன. இக்கோயிலில் முன் மண்டபத்தை இடித்துவிட்டு, கருங்கல் மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கருங்கல் மண்டபம் கட்டுமான தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், திருப்பணிக் குழுத் தலைவா் உ.வே.கு. அரங்கநாதாச்சாரிய சுவாமிகள், கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாஸ், திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இப்பணிகளை தடையின்றி செய்து, வருமாண்டு முற்பகுதியில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு வருவதாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.