நியாயவிலைக் கடை விற்பனையாளா் பட்டியல் வெளியீடு
தருமபுரி மாவட்ட கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய இணைப் பதிவாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 101 விற்பனையாளா் பணியிடங்களுக்கு 2024, நவம்பா் 25 முதல் டிசம்பா் 5 ஆம் தேதி வரை நோ்முகத் தோ்வு மூலம் ஆள்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இப் பதவிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரங்கள் தருமபுரி மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.